மாங்குள வெடிவிபத்தில் ஒருவர் பலி!


வன்னியின் மாங்குளம் பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர்உயிரிழந்துள்ளார்.மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

யுத்த நடவடிக்கைகளின் போது புதைக்கப்பட்டிருந்த வெடிபொருள் வெடித்ததிலிலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஏற்கனவே அண்மையில் முகமாலைப்பகுதியிலும் கண்ணிவெடியகற்றலில் ஈடுபட்ட பணியாளர் ஒருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


மாங்குளத்தில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியின் போது ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த மருதநகர் கிளிநொச்சியை சேர்ந்த பத்மநாதன் திலீபனுக்கு பல தரப்புக்களும் தமது அஞ்சலிகளை செலுத்தி வருகின்றன.

குறிப்பாக அண்மைக்காலமாக கண்ணிவெடியகற்றல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது உரிய பொறிமுறைகள் அமுல்படுத்தாமையா காரணமென கேள்வி எழுந்துள்ளது.


No comments