கரிசனை உள்ள தரப்பு: மறுதலித்த நீதிவான்!

நினைவேந்தல் தொடர்பில் கரிசனை உள்ள தரப்பு என நீதிமன்றில் ஆஜராக முன்வந்த சட்டத்தரணிகளை நீதிவான நிராகரித்தமை சர்சசைகளினை தோற்றுவித்துள்ளது. அவர்களின் விண்ணப்பத்தை நீதிவான்  பதிவு செய்த பின்னர் அவ்வாறு முன்னிலையாக சட்டத்தில் இடமில்லை என சமர்ப்பண விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை வழங்கியிருந்தமையே சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்திற்கு தடை கோரி பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் என சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாக நீதிவான் அனுமதிக்க வில்லை.

நல்;லூரில் அமைந்துள்ள தியாகி தீபம் திலீபனின் நினைவு தூபியை சூழவுள்ள சுற்றுவேலிகள் மற்றும் நினைவேந்தலுக்காக போடப்பட்டுள்ள கொட்டகைகள் மற்றும் உருவப்படங்களை அகற்றும்படியும், நினைவேந்தலை நிறுத்தும்படியும் மாநகரசபை ஆணையாளருக்கு அவசர உத்தரவினை வழங்குமாறு யாழ்.பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனு மீதான விசாரணை இன்றைய தினம் செவ்வாய்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் சி. சதிஸ்தரன் முன்னிலையில்  விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அதன் போது , தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை சேர்ந்த சட்டத்தரணிகள் உள்ளிட்ட சில சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையான போது நீதிவான் அதற்கு அனுமதி வழங்க வில்லை என தெரிவிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் சார்பில் சுமந்திரன் பிரசன்னமாகியிருந்தனர். அதே நேரம் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் தாம் மன்றில் முன்னிலையாக போவதாக சில சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்திருந்தனர். 

அந்த  பாதிக்கப்பட்ட தரப்பு யார் என நீதிவான் கேட்ட போது , கரிசனை உள்ள தரப்பு என என கூறினார்கள் அவர்களின் விண்ணப்பத்தை நீதிவான்  பதிவு செய்த பின்னர் அவ்வாறு முன்னிலையாக சட்டத்தில் இடமில்லை என சமர்ப்பண விண்ணப்பத்தை நிராகரித்து கட்டளை வழங்கினார் .

No comments