கையெழுத்து வைக்க கள்ளப்படுகின்றார் கூரே?


ஆளுநர் ரெஜினோல்ட் கூரே நினைத்தால் ஒரு நிமிடத்தில் வடமாகாண அமைச்சர்கள் பிரச்சினையினை தீர்த்துவிடலாம்.அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் வடமாகாண அமைச்சர்கள் சம்பந்தமாக எழுந்திருக்கும் சட்டப்பிரச்சனையை ஒருநிமிடத்தில் தீர்க்கமுடியும் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் அவைத்தலைவர் என்ன கருத்தில் அவ்வாறுசொன்னாரோ தெரியாது. ஆனால் அவர் கூறுவதுபோல் ஒரு நிமிடத்தில் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். ஆளுநர் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நான் டெனீஸ்வரன் பதவி நீக்கம் செய் த விடயத்தை அப்பொழுதிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் இலங்கை வர்த்தமானியில் பிரசுரிக்க இந்தச் சிக்கல் தீரும். உரியவாறு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினால் அது சிக்கலைத் தீர்க்கும். கையெழுத்திட ஒருநிமிடம் தேவையில்லை. 

பலர் தற்போதிருக்கும் ஐந்து அமைச்சர்களில் ஒருவரை நீக்குமாறு நான் சிபார்சு செய்யவேண்டும் என்றும் அவர் இடத்தில் டெனீஸ்வரன் வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அது நடைமுறைச் சாத்தியம் அற்றது. காரணம் ஒரு அமைச்சரைப் பதவி இறக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று தெளிவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே நான் எந்த ஒருபதவி இறக்கமும் செய்யமுடியாது. ஏற்கனவே சிபார்சு செய்தாகிவிட்டது. ஆதை வலுப்படுத்த ஆளுநர் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் அவர்தான் தோன்றித்தனமாக ஒரு அமைச்சரை நீக்கி டெனீஸ்வரனை உள் ஏற்றால் குறித்த அமைச்சர் நீதிமன்றம் செல்வார். தான் உரியவாறு ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் என்ற ரீதியில் ஆளுநர் தம்மை நீக்கமுடியாது என்று வாதாடுவார். மேலும் முதலமைச்சரின் சிபார்சு இன்றி தம்மை அவர் பதவிநீக்கம் செய்யமுடியாது என்றும் வாதாடுவார். 

ஆகவே இதற்கு ஒரே வழி 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த டெனீஸ்வரனின் பதவி நீக்கம் பற்றி  அப்பொழுதிருந்து வலுவேற்கும் விதத்தில் வர்த்தமானியில் பிரசுரிப்பதுதான். ஆனால் அதனை ஆளுநர் செய்கின்றார் இல்லை. டெனீஸ்வரன் அவர்கள் தம் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்மானமொன்றைப் பெற்றவுடன் அவருக்கு தொலைபேசி மூலம் உடனே பாராட்டுக்களைத் தெரிவித்தவர் ஆளுநரே. ஏதோ காரணத்திற்கு மேற் கூறப்பட்டவாறு பிரசுரிக்க அவர் தயங்குகின்றார். தயங்காது வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு உடனே நடவடிக்கை எடுத்தால் ஒரு நிமிடம் போகாது குறித்த கையெழுத்துவைக்கவென நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

No comments