திலீபனின் நினைவேந்தல்:தாமதித்தது கூட்டம்!

உலக சுற்றுலாத்தினகொண்டாட்டங்களை முன்னிட்டு இன்றைய தினம் நடைபெற்ற  சுற்றுலாக் கண்காட்சிகள்,கலை கலாச்சாரநிகழ்வுகள் உணவுத் திருவிழா ஆகிய நிகழ்வுகள் திலீபனின் நினைவேந்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு நடத்தப்பட்டுள்ளது.

இன்றைய இந்தநிகழ்வுகாலை 9 மணிக்கு ஆரம்பமாவதாக இருந்தது. ஆனால் தியாகி திலீபன் 31 வருடங்களுக்கு முன் இந் நாளில் உயிர் நீத்த காலைநேரம் 10.48 ஐ நினைவுகூர்ந்து இக் கூட்டம் காலை 11 மணிக்கு தொடங்கியது. ஜனநாயக முறையில் அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த ஒருவரின் வாழ்க்கை இன்றைய ஜனநாயக, அகிம்சை வழி அரசியல் போராட்டங்களுக்கு ஒரு முன்னோடியாக அமைந்திருந்தது. ஆகவேதான் அவர் நினைவுக்கு மதிப்பளித்து இக் கூட்டத்தைச் சற்று தாமதித்துத் தொடங்குகின்றோமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்திருந்தார். 

மத்தியஅரசின் சுற்றுலாமற்றும் கிறிஸ்தவ மதவிவகார அமைச்சின் அனுசரணையுடன் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும், வடமாகாண சுற்றுலாப்பணியகமும் இணைந்து இவ் ஆண்டிற்கான உலக சுற்றுலாத் தினத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கு திட்டமிட்டதன் பிரகாரம் அந்நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது. 

No comments