வவுனியாவில் பெண்கள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!!

சமூகத்தினை சீர்கெடுத்து வரும் பெண்களுக்கு எதிராக வடமாகாண பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (30.08.2018) காலை 9.00 மணியளவில் எதிர்ப்பு போராட்ட ஊர்வலமோன்று இடம்பெற்றது.

தாய்தையாகப் போற்றப்படும் பெண்கள் இன்று கேவலமாக இழிவுபடுத்தப்படுகின்றார்கள். இவ்வாறு கேவலப்படுத்தி வருகின்ற பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் . தங்களுடைய நிர்வாணப்படங்களை இணையத்தளங்களில் வெளியிட்டு வரும் பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பாடசாலை மாணவர்களிடையே நிலவும் போதைப்பொருள் மற்றும் சுமாட்போன், மாலைநேர வகுப்புக்கள் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் . எதிர்வரும் சமூகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா நகரசபைக்கு முன்பாக ஆரம்பமான போராட்டமானது ஏ9 வீதியுடாக வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி காவல் மா அதிபரின் காரியாலயத்தினை சென்றடைந்தது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இணையத்தளங்களில் பெண்கள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதை தடை செய்யவேண்டும், மீண்டும் மீண்டும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவார்கள் எனில் மக்களாகிய நாம் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் , பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி மாலைநேர வகுப்புக்களை தடை செய்ய வேண்டும் , தமது லீலைகளை வெளியிடுவதால் ஏனைய பெண்களின் நிலை ??? , பாடசாலை மாணவர்களின் போதை பாவனையை முற்றிலும் தடுப்போம் என்ற பல்வேறு பாதாதைகளை தாங்கிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி காவல் மா அதிபர் அனுர அபயவிக்கிரம அவர்களிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கையளித்தனர்.

மனுவினைப் பெற்றுக்கொண்ட வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி காவல் மா அதிபர் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாகவும் , உரிய தரப்பினருக்கு தகவலை வழங்கி தீர்வினை பெற்றுத்தருவதாக தெரிவித்தார்.







No comments