மகாவலி அதிகாரசபையின் நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் அணிதிரளவோம்!

28 ஆகஸ்ட் 2018 அன்றுமுல்லைத்தீவில் வெகுசனஅமைப்புக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள மகாவலி அதிகாரசபையின் நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தின் பின்னணி தொடர்பிலான தமிழ் சிவில் சமூக அமையத்தின் விளக்க அறிக்கை 28 ஆகஸ்ட் 2018 அன்று முல்லைத்தீவில் வெகுசன அமைப்புக்களால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ள மகாவலி அதிகார சபையின் நில அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ் சிவில் சமூக அமையம் தனது முழுமையான ஆதரவை தெரிவிக்கின்றது.

போராட்டம்  அழைக்கப்பட்டுள்ளமைக்கான பின்னணி காரணம் பின்வருமாறு:

கடந்த ஜனவரி பெப்ரவரி 2017இல் கொக்கிளாய்,கருநாட்டுக்கேணி கரையோரப் பகுதியில் அரசகாணியில் அடாத்தாககுடியிருந்தனர் எனக் கூறி இரண்டு சிங்கள மீனவர்களுக்கு எதிராககரைத்துரைப்பற்று பிரதேச செயலகத்தினால் அரசகாணி (ஆட்சிமீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.வழக்கை விசாரித்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களையும் காணிகளைவிட்டு வெளியேறுமாறு சனவரி 2018 இல் கட்டளைவழங்கியது. அதன் பின்னர் காணிகளில் அடாத்தாககுடியிருந்த இருவரும் உயர் நீதிமன்றிற்குஅடிப்படைமனிதஉரிமைமீறல் வழக்கொன்றைதாக்கல் செய்தனர். பெப்ரவரி 2018இல் வழக்கைஎடுத்துக் கொள்ள(leave to proceed)மறுத்துஉயர் நீதிமன்றம் கட்டளையிட்டது.


இது இவ்வாறிருக்க 06.08.2018 அன்று மாகாவலிஅதிகார சபை மேற்படி இரண்டு சிங்கள மீனவர்களுக்கும் காணிஅனுமதிப் பாத்திரத்தை வழங்கி அவர்களின் சட்டப்பூரவமற்றகாணி அபகரிப்பை சட்டப்பூரவமாக்கியுள்ளது.

மேற்படி நடவடிக்கையானது மத்திய அரசாங்கத்தின் சட்டமான அரசகாணி (ஆட்சிமீளப்பெறுதல்) சட்டத்தின் கீழ் உரியதமிழ் அரசஅதிகாரிகளால் எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் நீதிமன்றத் தீர்ப்புக்களையும் கேலிக்குரியதாக்கியுள்ளது.

சட்டத்தின் ஆட்சிதம்க்குஒருபோதும் நிலையான தீர்வுகளைத் தரமாட்டா என்ற புரிதலை இச்சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு மீளஞாபகப்படுத்துகின்றன. அரசகாணியில் அடாத்தாக குடியேற்றப்பட்ட குடியமர்ந்த ஒருவரை நீதிமன்றம் மூலம் வெளியேற்றியபின்னர் அதனை மீறி மகாவலி அதிகார சபை அந்நபர்களுக்கு காணி உரிமத்தினை வழங்குவது இலங்கையின் விசித்திரமானசட்டக் கட்டமைப்பில் மகாவலி அதிகாரசபைக்குள்ள எல்லையற்ற அதிகாரங்களை தமிழர்களுக்கு ஞாபகப்படுத்துவதாக உள்ளது.

இவ்விடயத்தினை சட்டரீதியாக விளங்கிக் கொள்ளும் அதேவேளை நாம் இதனை அரசியல் ரீதியாக விளங்கிக் கொள்வது அதனை விடமுக்கியமானது.

13 ஆம் திருத்தத்தின் கீழ் அரசகாணிகள் தொடர்பில் மாகாணசபைகளுக்கு உண்மையில் குறிப்பிடத்தக்க அதிகாரம் எதுவும் இல்லை. அரசகாணிவழங்கல் தொடர்பில் மாகாண சபை கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்பதனைத் தவிரமத்திய அரசாங்கத்திடமே அரசகாணிகள் மீதானமுழுமையானகட்டுப்பாட்டை 13ஆம் திருத்தம் வழங்குகின்றது.

அரசகாணிகள் தொடர்பில் இருக்கும் இந்த பெயரளவு அதிகாரங்கள் கூட மகாவலிஅதிகார சபை சட்டத்தின் கீழ் வரும் திட்டங்களின் காணிகள் தொடர்பில் மாகாணசபைக்கு இல்லை.


இந்த பின்னணியில் வைத்துநாம் மகாவலி அதிகாரசபையின் அரசியல் நோக்கங்களை விளங்கிக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். முல்லைத்தீவை சிங்களபௌத்தமயமாக்கும் கருவிகளில் ஒன்று மகாவலி அதிகாரசபையால் 1980களில் அறிமுகம் செய்துவைக்கப்பட்டகுடியேற்றதிட்டம் ''L''. மகாவலி ஆற்றோடு சம்பந்தப்படாதவடக்கையும் கிழக்கையும் இணைக்கும் தமிழர் பகுதிகளைவளைத்து ''L'.' திட்டம் உருவாக்கப்பட்டுவடக்குகிழக்கின் நிலத் தொடர்ச்சியைசிங்களகுடியேற்றங்கள் மூலமாக இல்லாமல் செய்வதே இதன் நோக்கம்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பகுதியாகிவிட்ட வெலிஓயாபகுதி 1980களில் இருந்துதொடர்ச்சியாகவந்தஅரசாங்கங்களின் தொடர் முயற்சியால் சாத்தியமாகியுள்ளது. இதற்குதடையாக இருந்ததுதமிழர்களின் ஆயுதபலம் ஒன்றே. அது முறியடிக்கப்பட்டபின் திட்டம் அதன் முழு வீச்சில் அரங்கேற்றப்பட்டுவருகின்றது.


யுத்தத்தின் போதுகுடியேற்றப் படமுடியாதிருந்தமுல்லைத்தீவின் கரையோரபகுதிகளான கொக்கிளாய், நாயாறு பகுதிகளை சிங்கள மயமாக்கும் திட்டம் 2009க்குப் பின்னர் வேகம் பெறத் தொடங்கியது. இதில் மகிந்த ராஜபக்ச, 'நல்லாட்சி' 'சிறிசேனஆட்சிகளுக்கிடையில் எந்தபேதமும் இல்லை.  மகாவலிஅதிகார சபை நேரடியாகசனாதிபதிசிறிசேனவின் மகாவலிமற்றும் சுற்றுச் சூழல் அமைச்சின் கீழ் வருகின்றது.

ஆகவேதற் போது நீதிமன்றத்தால் வெளியேற்றப்பட்ட சிங்கள மீனவர்களுக்கு காணி உரிமத்தினை வழங்குவதில் சனாதிபதியின் நேரடியானபங்களிப்பு இல்லாமல் சாத்தியமாகியிருக்கமுடியாது.

இந்தநடவடிக்கை மூலம் சனாதிபதிசிறிசேனதனது 'நல்லாட்சி' அரசாங்கத்தின் இரட்டைமுகத்தைமீளஒருமுறைநிரூபித்துள்ளார். ஒருபுறம் காணிவிடுவிப்பும் இன்னொருபுறம் காணிஅபகரிப்பும் என இவ்வரசாங்கம் தமிழர்களையும் உலகத்தையும் ஏமாற்றுகின்றது.

ஒருபக்கம் தமிழர்களுக்கானஅரசியல் தீர்வைவழங்குவோம் என்று கூறிக்கொண்டு இன்னொருபக்கம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் நீண்டகரங்களான மகாவலி அதிகார சபை போன்றவற்றை முழுமையாக பயன்படுத்தி, சிங்கள பௌத்தகுடியேற்றத்தை வீரியமாக முன்னெடுத்து, அரசாங்கம் தமிழர்களை மீண்டும் விரக்திநிலைக்குஆட்படுத்துகின்றது.

மகாவலிஅதிகார சபை மாத்திரமல்லாதுதொல்லியல் திணைக்களம் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்துவரும் நில அபகரிப்பு அபாயங்களையும் எதிர்கொள்ளவேண்டியவர்களாக நாம் உள்ளோம். 

இந்தநெருக்கடிகளைக் கையாளதமிழ் மக்கள் பல்வேறுபட்ட அரசியல் உத்திகளைக் கையாளவேண்டியவர்களாக உள்ளோம். சிவில் சமூகமாக மக்களை அணிதிரட்டி போராடுவது அதில் முக்கியமானது. அந்த வகையில் நாளை நடைபெறவுள்ள போராட்டம் முக்கியமானது. இந்த எதிர்ப்பை மாற்றத்தை நோக்கி உந்த தொடர்ச்சியான பல்முனைப்பட்ட செயற்பாடுகள் அவசியாமின்றன. அவை தொடர்பான செயற்பாடுகளை தமிழ் அரசியல், சமூக அமைப்புக்கள் இணைந்து முன்னெடுக்கதமிழ் சிவில் சமூக அமையம் அழைப்புவிடுக்கின்றது.


(ஒப்பம்)
அருட்பணிவீ.யோகேஸ்வரன்

குமாரவடிவேல் குருபரன்
இணைப் பேச்சாளர் இணைப் பேச்சாளர்.


No comments