முதலமைச்சர் முடிவு: விரைவில் வெளிவருகின்றது?

முதலமைச்சர் விக்கினேசுவரனின் அடுத்த அரசியல் நகர்விற்கான சமிக்கை விரைந்து வெளியிடப்படலாமெனஎதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விரைவில் கூடலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

கூட்டமைப்பு மீளவும் சந்தர்ப்பம் வழங்கினால் அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக சுமந்திரன் தெரிவித்துள்ளநிலையில் சம்பந்தன் அதனை தாண்டி எந்தவொரு நகர்வினையும் முன்னெடுக்கப்போவதில்லையென்பது உறுதியாகியுள்ளது.

இத்தகைய சூழல் கூட்டமைப்பினுள் உருவாக வேண்டுமென முதலமைச்சர் எதிர்பார்த்திருந்ததாக நெருங்கிய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாகாணசபைத் தேர்தலில் மீண்டும் தற்போதைய முதலமைச்சர் விக்கினேசுவரனுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டிய நிலை வந்தால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்தும் அரசியலிலிருந்தும் ஒதுங்கிக்கொள்ளவேண்டிய நிலை தனக்கு ஏற்படும் என சுமந்திரன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதே கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனும் வலியுறுத்தியுள்ளதுடன் விக்கினேசுவரனோடு தன்னால் ஒத்துழைத்து செயற்படமுடியாது எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

இவற்றின் அடிப்படையில் கூட்டமைப்பினை உடைத்த அவப்பெயர் தனக்கு ஏற்படுவதிலிருந்து தப்பித்துக்கொண்டுள்ளதாக முதலமைச்சர் தனது நெருங்கிய தரப்புக்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனது வேகமான நகர்வுகளை முதலமைச்சர் தரப்பு துரிதப்படுத்த தயாராகியுள்ளது.

அவ்வகையில் தமிழ் மக்கள் பேரவையின் அவசர கூட்டம் விரைவில் கூடவுள்ளதுடன் தீர்க்கமான முதுவுகள் எட்டப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments