திருட முயன்றவர்கள் பொதுமக்களால் நையப்புடைப்பு!

வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை உடைத்து திருட முற்பட்ட நபர்களை பொதுமக்கள் நையப்புடைத்தனர் . அவர்களில் ஒருவர் தப்பியோடியுள்ளார்.

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை நேற்றிரவு (30.08.2018) 10 மணியளவில் வர்த்தக நிலையத்தின் மின்சாரத்தினை துண்டித்து விட்டு கதவினையுடைத்து திருட முற்பட்ட சமயத்தில் வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் திருடர்களை மடக்கி பிடித்துள்ளார்.

இதன் போது அவரிடமிருந்து தப்பிச் சென்ற திருடர்கள் குறித்த வர்த்தக நிலையத்திற்கு அருகேயுள்ள மரக்காலைக்குள் தப்பியோடியுள்ளார். இதன் போது அவர்களில் ஒருவர் பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டதுடன் ஒருவர் தப்பித்து சென்றுள்ளார்.

திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய உந்துருளி ஒன்றும் பொதுமக்கள் கைப்பற்றியுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதுடன்  மடக்கிப்பிடித்த திருடனை பொதுமக்கள் கயிற்றினால் கட்டி வைத்துள்ளனர்.



No comments