முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்களை கோத்தபாயவே மேற்கொள்ளப்பட்டது - ராஜித

நல்­லாட்சி அரசு ஆட்­சிப் பீடம் ஏறிய பின்­னர் முல்­லைத்­தீவில் எந்­தச் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­தை­யும் மேற்­கொள்­ள­வில்லை. அங்கு நடை­பெற்ற சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் எல்­லாம் முன்­னாள் பாதுகாப்பு அமைச்­சின் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் காலத்­தில் மேற்கொள்ளப்பட்டவையே.

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் முன்­னெ­டுக்­க ப்பட்டமைக்குரிய சாட்­சி­யங்­கள் இருந்தால் முத­ல­மைச்­சர் சி.வி.விக்னேஸ்­வ­ரன் அர­சு­டன் பேச்சு நடத்­த­வேண்­டும். அதை விடுத்து இன­வா­தம் கக்­கிக் கொண்­டி­ருக்­கக் கூடாது. இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்சாளருமான ராஜித சேனா­ரட்ன தெரி­வித்­தார்.

அரச தக­வல் திணைக்­க­ளத்­தில் நேற்று இடம்­பெற்ற, அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்­கும் செய்தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார்.  அவர் தெரி­வித்­த­தா­வது,

வடக்கு மாகாண சபை­யின் ஊடாக முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தனது மக்­க­ளுக்கு எத­னை­யும் செய்­ய­வில்லை. தற்­போது வடக்­கில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் நடக்­க­வில்லை. எமது அரசு அவ்வாறு எது­வும் செய்யவில்லை. இந்த நிலை­யில் அவர் இன­வா­தத்தை கையில் எடுத்துள்­ளார்.

வடக்கு மக்­கள் உண­வுக்­காக அல்­லா­டு­கின்­ற­னர். ஆனால் முத­ல­மைச்­சர் விக்­னேஸ் வ­ரன் இரா­ணுவ நினை­வுத் தூபியை அகற்­று­வது தொடர்­பில் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார். அங்­குள்ள மக்­கள் அது தொடர்­பில் பேசவில்லை. விக்­னேஸ்­வ­ர­னுக்கு தற்­போது தேவைப்­ப­டு­வது இன­வா­தம் மாத்திரம்தான்.

No comments