விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு எமனாக மாறிய கயிறு!

கிளிநொச்சி இரணைதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கற்கும் கஜேந்திரன் துவாரகன் (வயது- 13) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்த சிறுவன் வழமை போன்று தன் இரு தங்கைகளுடுன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போதே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று பெற்றோர்கள் கூறுகின்றனர்.
கொய்யா மரத்தில் கட்டப்பட்டிருந்த கயிறு ஒன்றே சிறுவனின் கயிற்றை இறுக்கியுள்ளது. சிறுவனின் தாய் சிறுவனை மீட்டு அயலவர்களின் உதவியுடன் முழங்காவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். எனினும் சிறுவன் உயிரிழந்துள்ளான்.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment