பிராந்திய பாதுகாப்பு திட்டத்தில் சிறிலங்காவிற்கு அமெரிக்க நிதியுதவி

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு  சுமார் 300 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவிகளை வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் பம்பியோ அறிவித்துள்ளார்.

வொசிங்டனில் நேற்று நடந்த ஆசியான் பிராந்திய அமைப்பின் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த திட்டத்தின் கீழ், சிறிலங்கா, பங்காளதேஷ், இந்தோனேசியா, மொங்கோலியா, நேபாளம், பசுபிக் தீவுகள், பிலிப்பைன்ஸ், வியட்னாம் உள்ளிட்ட 27 நாடுகள் அமெரிக்காவின் இராணுவ உதவியைப் பெறவுள்ளன.

கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்தல், மனிதாபிமான உதவி அனர்த்த மீட்பு, அமைதி காப்பு திறன்களை உள்ளடக்கிய 290.5 மில்லியன் டொலர் வெளிநாட்டு இராணுவ நிதி மற்றும், அனைத்துலக போதைப்பொருள் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்தலுக்கான 8.5 மில்லியன் டொலர் நிதியுதவியை உள்ளடக்கியதாக- நாடு கடந்த குற்றங்களுக்கு எதிரான இந்த  நிதி உதவி அமைந்துள்ளது.

No comments