கருணாநிதிக்கு பிரியா விடை... கண்ணீர் கடலாக மாறிய ராஜாஜி அரங்கம்


கருணாநிதியின் உடலுக்கு மக்களும் தொண்டர்களும் பிரியா விடை கொடுத்து வருவதால் ராஜாஜி அரங்கமே கண்ணீர் கடலாக மாறியது. கருணாநிதி கடந்த 11 நாட்களாக அவர் உடல்நிலை பாதிப்பால் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவரது உடல்நிலையில் ஏற்றமும் இறக்கமும் அவ்வப்போது வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து மருத்துவமனை முன்பு ஏராளமானோர் கூடினர்.

மீண்டு வா காவேரி மருத்துவமனை முன்பு தொண்டர்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். மேலும் எழுந்து வா தலைவா, மீண்டு வா தலைவா, கேக்கலையா கேக்கலையா நாங்கள் கூப்பிடுவது கேக்கலையா என்று கோஷங்களை எழுப்பினர்.

உடலுக்கு அஞ்சலி ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்களும், அரசின் இன்னாள் முன்னாள் அதிகாரிகளும், சினிமா பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் பொது மக்கள் அஞ்சலி செலுத்த நீண்ட தூரம் காத்து கிடக்கின்றனர்.


No comments