மட்டக்களப்பில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல் நிலைய பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

காவல்துறையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் இருந்து குறித்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரி-56 ரக துப்பாக்கிகள் மூன்றும் அதற்குரிய ரவைக்கூடுகள் ஐந்தும்  குழி ஒன்றில் பொலித்தீன் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments