வல்வைப்படுகொலை:வல்வெட்டித்துறையில் நினைவுகூரல்!


வல்வைப் படுகொலையின் 29ம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. வல்வையில் வைத்து 1989ம் ஆண்டு இதே நாளில் இந்திய அமைதிப்படை இராணுவத்தினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 63 பொது மக்களும் இன்று நினைவு கூரப்பட்டிருந்தனர்.

ஜனநாயகப் போராளிகள் கட்சி ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்த வருகை தந்திருந்ததாக சொல்லப்பட்ட இந்திய அமைதிப்படையின் மைலாய் படுகொலையென அடையாளப்படுத்தப்பட்ட வல்வைப்படுகொலையே இன்று நினைவுகூரப்பட்டுள்ளது.

படுகொலையான மக்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபி இலங்கைப்படைகளால் முற்றாக அழித்து நிர்மூலமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூபி அமைந்திருந்த இடத்தில் இன்றைய நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதனிடையே இந்திய துணை தூதரக பின்னணியில் செயற்பட்டுவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த ஜனநாயகப்போராளிகள் அமைப்பு வல்வைப்படுகொலையினை நினைவு கூர்ந்து அக்குற்றச்சாட்டிலிருந்து விடுதலையாகியுள்ளது.

No comments