இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை - இலங்கைக்கு பாதிப்பில்லை

இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் இதனால் இலங்கைக்கு எந்தவிமான அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கவில்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் லம்பாக் என்ற தீவின் அருகே இன்று 7.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகளும், கட்டிடங்களும் குலுங்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments