யாழ்ப்பாணத்தில் சிங்கள மகாவித்தியாலயம் ?


30 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கிய சிங்கள மகா வித்தியாலத்தை மீண்டும் மீள இயக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்
அனைத்து இன மாணவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் குறித்த பாடசாலையை மீள இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1985 ஆம் ஆண்டு யுத்த காலப் பகுதியில் இடம்பெற்ற மோதலினால் மூடப்பட்ட இந்த வித்தியாலயத்தின் இவாறான கல்வி நடவடிக்கையின் ஊடாக நல்லிணக்கத்தை துரிதமாக முன்னெடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது. இதற்கமைய இங்கு முன்னர் கல்விகற்ற பழைய மாணவர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுக் கூட்டம் இம் மாதம் 26 ஆம் திகதி காலை 8.30 க்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments