சுவிஸ் சமஷ்டி உறுப்பினர் சம்பந்தனுடன் பேச்சு


இலங்கைக்கு உத்தியோகபூர்வ மேற்கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் சமஷ்டி சபை உறுப்பினர், சட்டம் மற்றும் பொலிஸ் அலுவல்கள் தொடர்பான திணைக்களத்தின் அதிகாரி சிமோனெடா சொமாருகா மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா சம்பந்தன் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

இந்த சந்திப்பு இன்று (07) காலை திருகோணமலையில் உள்ள எதிர்க்கட்சி தலைவரில் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போது நாட்டில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதேவேளை, இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், வட பகுதியில் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் காணாமற் போனோர் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments