எதிர்க்கட்சித்தலைவர் குறித்த முடிவு நாளை !


எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று (06) பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்தத் தீர்மானம் சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

குறித்த தீர்மானத்தை நாளை நடைபெற உள்ள கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் சமர்பிக்க உள்ளதாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments