மனைவி,சகோதரர்களிற்கு வாழ்வளித்த வடமாகாணசபை?


வடமாகாணசபையின் அமைச்சர்கள் முதல் உறுப்பினர்கள் ஈறாக மாதாந்தம் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான வருவாயினை பார்த்துக்கொண்டு மறுபுறம் வெட்டியாய் சபையினை கொண்டு செல்கின்றனர்.

வடமாகாணசபையில் முதலமைச்சர் முதலில் தனது உறவினரொருவரையும் பணியாளராக இணைத்துக்கொண்ட போதும் பின்னர் அவரை இடைநிறுத்திக்கொண்டார்.

தற்போது வரை தனது உறவினர்கள் அல்லாதவர்களிற்கு தனிப்பட்ட ஆளணியில் நியமனம் செய்துள்ள ஒரு அமைச்சரெனில் அவர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மட்டுமே.

மற்றைய உறுப்பினர்கள் பலரும் தமது முக்கிய தேவைகளை ஆற்றும் பணியாளராக மனைவியினையே நியமித்துள்ளனர்.அதிலும் சுகிர்தன் ஒரு படி மேலே சென்று மனைவி,தந்தை மற்றும் தம்பியார் என மூவருக்கு வேலை வழங்கியிருக்கின்றார்.  

அதே போன்று தமிழரசில் ஊழலிற்காக குரல் கொடுக்கும் பரஞ்சோதியோ மனைவி,சகோதரனிற்கு வேலை வாய்ப்பு வழங்கியுள்ளார்.

எனினும் ஜங்கரநேசன் உள்ளிட்ட சிலர் புறநடையாக வெளி இளைஞர்கள் அல்லது தமது ஆதரவாளர்களிற்கு வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளனர்.
இதனை சமூக ஆர்வலர் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

வுடமாகாணத்தில் வேலையற்ற இளைஞர்,யுவதிகள் பற்றி பேசிக்கொண்டிருக்கின்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் மறுபுறம் தமது குடும்பத்தவர்களிற்கு வேலை வாய்ப்பு வழங்கி மாதாந்தம் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வருவாயை பார்த்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.






No comments