அனந்திக்கு ஆளுநர் அனுமதியில்லை?

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் இந்தியாவிற்கு சென்று திரும்பியுள்ள நிலையில் அவரிற்கான அனுமதியை வழங்காது ஆளுநர் இழுத்தடித்தமை தொடர்பில் தற்போது கேள்வி எழுந்துள்ளது. 

வழமையாக முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் ஈறாக நாட்டிற்கு வெளியே செல்வதாயின் ஆளுநருக்கு அறிவிக்கவேண்டும்.எனினும் நிச்சயமாக ஆளுநரது அனுமதியுடன் தான் வெளியே செல்லவேண்டுமென்பது மக்கள் பிரதிநிதிகளிற்கு கட்டாயமான நிபந்தனையாக இல்லையென அரசியல் வட்டாரங்களில் சொல்லப்படுகின்றது.

இதனிடையே அனந்தி தற்போது அமைச்சரா இல்லையாவென்பது தொடர்பில் ஆளுநர் சந்தேகம் கொண்டுள்ளதாலேயே அனுமதி வழங்கி அங்கீகாரம் கொடுக்க பின்னடித்தமையாலேயே நாட்டிற்கு வெளியே செல்ல அனுமதியை வழங்கியிருக்கவில்லையென சொல்லப்படுகின்றது. தற்போது முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட  வழக்கு மற்றும் அதற்கான இடைக்கால தடை தொடர்பில் ஆளுநர் மீதே குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அனந்தி இந்தியா சென்றிருந்த விவகாரம் மற்றும் அதற்கான அனுமதியை ஆளுநர் வழங்கியிராமை தொடர்பில் சர்ச்சைகள் மூண்டுள்ளது.

No comments