கிள்ளி வீசிவிட்டு அள்ளியெடுக்கும் நல்லாட்சி மைத்திரி?


ஒருபுறம்; வலிகாமம் உயர்பாதுகாப்பு வலயத்தில் வெறும் நான்கு ஏக்கர் நிலப்பரப்பினை விடுவித்துவிட்டு தமிழர் இதயபூமியான மணலாறில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை சுவீகரிக்க மைத்திரி முன்னெடுத்துவரும் நாடகம் தொடர்பில் கூட்டமைப்பின் கள்ளளெனம் கேள்விக்குறியாகியுள்ளது. தமிழர்களின் தாயக பூமியான வடக்குக் கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களும் சிங்கள பௌத்த மேலாதிக்கமும் வீச்சுப்பெற்று வருகின்றது.அதிலும் குறிப்பாக வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் முல்லைத்தீவில் நில ஆக்கிரமிப்பு அபாயக்கட்டத்தை எட்டுகின்றது..மகாவலி எல் வலயம் என்ற போர்வையில் முழு முல்லைத்தீவையும் சிங்கள மயமாக்க முற்படுவதோடு தமிழர்களின் வாழ்வாதாரமும் சிதைக்கப்படுகிறதென சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே தற்போதைய ஜனாதி பதி இரண்டு தடவைகள் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்தவர். அவருக்கு இந்த மகா வலி திட்டம் தொடர்பாக முற்றும் உணர்ந்தவர். ஆனால் விடயம் அதுவல்ல இந்த மகாவலி திட்டத்தினூடாகவே யாழ்ப்பாணத்திற்கு நீர் வழங்கும் திட்டம் வந்த போது த.தே.கூட்டமைப்பு மகாவலிதிட்டத்தை ஏற்றுக்கொண்டதை மறைத்தார்கள். மகாவலிதிட்டத்தையும் அதன் அதிகாரங்கள் என்ன என்று தெரியாமலா கூட்டமைப்பினர் ஏற்றுக்கொண்டார்களென்ற கேள்வியுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக நீர் யாழிற்கு வருவதற்கு முன் பல மகாவலி வலயங்கள் வடக்கில் உருவாக்கப்பட போகிறது. 

உண்மையில் குறித்த மகாவலி எல் வலயத்திட்டம் தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கள்ளமௌனத்தை தொடர்கின்றனர்.தற்போது அது பற்றி அவர்கள் பேச மறுத்துவருகின்ற நிலையில் தமிழ் உணர்வாளர்கள் சிலரும் ஊடகங்களுமே முனைப்புடன் மக்களிடையே அவற்றினை கொண்டு செல்ல பாடுபடுகின்றனர்.

ஆகவே இவற்றை தடுத்து நிறுத்தி மண்ணையும் மக்களையும் பாதுகாக்க ஒரேவழி மக்களின் தொடர்ச்சியான ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களேயென தமிழ் தேசிய ஆதரவாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுவருகின்றனர்.

No comments