மைத்திரி வருகை:முன்னாள் போராளிகளை தேடும் காவல்துறை!


மயிலிட்டித் துறைமுக விஸ்தரிப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு இலங்கை ஜனாதிபதி எதிர்வரும் 22ம் திகதி வருகை தரவுள்ள நிலையில் அப்பகுதியிலுள்ள புனர்வாழ்வு பெற்ற முன்னாள்  போராளிகள் விபரத்தை திரட்டுவதில் இராணுவ புலனாய்வுதுறை மற்றும் காவல்துறை மும்முரமாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதியின் வருகையினை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன.

இதற்காக காங்கேசன்துறை முதல் வளலாய் வரையான கரையோரப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்களினது தகவல்கள்  புலனாய்வாளர்கள்,காவல்துறையினால் விபரங்கள் திரட்டப்பட்டுவருகிறது.இதில் புனர்வாழ்வு பெற்றவர்களின் விபரங்கள் தனியாக சேகரிக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே கடந்த 30 வருடங்களிற்க மேலாக படையினரிடமிருந்த மயிலிட்டி இறங்குதுறை அண்மையிலேயே விடுவிக்கப்பட்டிருந்தது.இதனை சர்வதேச மட்டத்தில் பிரச்சாரப்படுத்த அரசு முற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments