வீடமைப்பை பறித்த கூட்டமைப்பு:மனோ சாடல்!


தன்னிடமிருந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கான வீட்டுத்திட்டத்தைப் பிடுங்கி, அமைச்சர் சுவாமிநாதனிடம் கொடுக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கோரியுள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன், முல்லைத்தீவில் பகிரங்கமாக கூறியிருக்கிறார்.

புதுக்குடியிருப்பு வள்ளிப்புனம் மகாவித்தியாலயத்தில் தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்;சின் நடமாடும் சேவை இன்று 26ம் திகதி ஞாயிறு காலை 9மணி முதல் 3மணி வரை நடைபெற்றிருந்தது.

அங்கு தமக்கான வீடமைப்பு திட்டங்களை கோரி மகஜர்களை கையளித்த பொதுமக்களிடையே கருத்து வெளியிட்ட மனோகணேசன் தன்னிடமிருந்து வடக்கு, கிழக்கு மக்களுக்கான வீட்டுத்திட்டத்தைப் பிடுங்கி, அமைச்சர் சுவாமிநாதனிடம் கொடுக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கோரியுள்ளதாக தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதற்காக அவ்வாறு செய்ததென்பது தனக்கு தெரியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு வீடமைப்புத்திட்டத்தை மனோகணேசனிடமிருந்து பறிக்கவேண்டுமென்பதில் தமிழரசு சரவணபவன் முதல் அவரது கட்சி பத்திரிகை வரை துள்ளி குதித்தே திரிந்திருந்தன.

அடுத்த தேர்தலிற்கான துருப்புசீட்டாக வீடுகளை பெறும் பயனாளர்களை இக்கும்பல் கருதுவதாலேயே மனோகணேசனிடமிருந்து பறித்து தமது எடுபிடியாக உள்ள சுவாமிநாதனிடம் கையளிக்க திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments