தியாகிக்கும் துரோகிக்கும் விழாவெடுக்கும் டெலோ?


தியாகிக்கும் துரோகிக்கும் சேர்த்து ஜனன தின நிகழ்வை கொண்டாடி புதிய சந்தையினை திறந்துள்ளனர் டெலோ கட்சியினர்.தியாகி பொன் சிவகுமாரன் மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்படட அரசியல்; தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் ஆகியோரின் ஜனன தின நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை டெலோவினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

கோமாளி அரசியலில் தற்போது பிரபலமாகியுள்ள கே.சிவாஜிலிங்கம்,சிறீகாந்தா அக்கட்சியின் வடமாகாண சபை உறுப்பினர் குகதாஸ்,வலிகிழக்கு பிரதேசசபை தவிசாளர் நிரோஸ் கும்பலே இன்றைய நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களை காட்டிக்கொடுத்து கொலை செய்த டெலோ சிறி அமைப்பின் செந்தூரன் எனும் நபரும் இதில் இணைந்திருந்தார்.

தியாகி பொன்.சிவகுமாரனின் தூபிக்கு மலரஞ்சலி செலுத்திய குழுவினர் வட்டுக்கோட்டை சென்று அங்குள்ள துரோகி அமிர்தலிங்கள் தூபிக்கு மலர் மாலை அணிவித்திருந்தனர்.

ஏற்கனலே தீருவிலில் குமரப்பா,புலேந்திரன் தூபி பகுதியில் துரோக கும்பல்களிற்கும் தூபி அமைக்க அண்மையில் கூட்டமைப்பு வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் கொண்டுவந்தமை தெரிந்ததே.  

No comments