வெடுக்குநாறி ஜயனார் கௌதம புத்தராகின்றார்?


நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என இலங்கை தொல்லியல் திணைக்களம் எச்சரித்துள்ள நிலையில் மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி காவல்துறையின் அச்சுறுத்தல்களின் மத்தியில் இன்று சனிக்கிழமை வழிபாடுகள் நடந்துள்ளது.

தமிழ் இந்துக்களது புனித நாளான ஆடி அமாவாசையான இன்று இலங்கை காவல்துறையின் கண்காணிப்பின் கீழ் வெடுக்குநாறி மலைiயிலுள்ள ஆதி ஐயனார் ஆலயத்தில் இன்று இறுதி வழிபாடு நடந்துள்ளது. தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டின் பேரில் தற்போது வெடுக்குநாறி மலை தமது ஆளுகைக்குள் வந்துள்ளதாகவும், வெடுக்குநாறி மலையில் உள்ள ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள காட்டுப்பகுதிக்குள் தமிழ் மக்கள் செல்லக்கூடாதெனவும், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கை காவல்துறை இன்றைய ஆடி அமாவாசை வழிபாட்டில் ஈடுபட அனுமதி பெற்று வழங்கியிருந்த நிலையில் இன்று ஆராதனைகள் நடந்துள்ளன.

தமிழ் மக்களது பூர்வீக மண்ணான நெடுங்கேணியில் அமைந்துள்ள தொல்லியல் வரலாற்றை கொண்ட பிரதேசத்தை முடக்குவதன் மூலம் அங்கு பௌத்த மத கதைகளை உருவாக்க தொல்லியல் திணைக்களம் முன்னிட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.

No comments