உழவு இயந்திரம் தடம்புரண்டதில் கிளிநொச்சியில் இளைஞன் சாவு


கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்பட்ட  ஊரியான் பகுதியில்  மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் தடம்புரண்டதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக  உயிரிழந்துள்ளார்.

பழைய கோரக்கன் கட்டுப்பகுதியைச் சேர்ந்த 23 வயதான ரமேஸ்குமார் சுயாந்தன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார். 

நேற்று (28-08-2018) காலை 8.30 மணியளவில் மண் ஏற்றிச் சென்ற வேளை ஆறு ஒன்றில் உழவுஇயந்திரம் இறங்கி ஏறிய போது உழவு இயந்திரம் தடம்புரண்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments