வடக்கு கிழக்கையும் சீனா விட்டுவைக்கப்போதில்லை


சிறிலங்காவில் முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் புதிய உட்கட்டமைப்பு திட்டங்களின் மீது சீனா கண் வைத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், தெரிவித்துள்ளது.

பிராந்திய எரிபொருள் கேந்திரமாக சிறிலங்காவை மாற்றும் இலக்குடன் இந்தியா செயற்படுகிறது. முன்னர் போர் நடந்த பகுதிகளில் ஏற்கனவே முக்கியமான வீடமைப்புத் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையிலேயே, முன்னர் போர் நடந்த பகுதிகளில் புதிதாக உட்கட்டமைப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா திட்டமிட்டுள்ளது என்றும் ரொய்ட்டர்ஸ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், சீனா முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ள உட்கட்டமைப்புத் திட்டங்கள் என்ன என்ற தகவல் எதையும் ரொய்ட்டர்ஸ் வெளியிடவில்லை.

அதேவேளை, இந்தியப் பெருங்கடல் தீவான சிறிலங்காவில் உறுதியாக காலூன்றும் பீஜிங்கின் நகர்வு  இது என்றும் ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.

No comments