யாழில் காலூன்றும் சீனா - இந்தியாவுக்கு அச்சுறுத்தல்


சிறிலங்காவில் இந்தியா தனது ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுகின்ற இடங்களில் ஏதோவொரு காரணம் கூறி தனது செல்வாக்கினை நிலைநிறுத்திவரும் சீனா யாழ் குடாநாட்டிலும் காலூன்ற முயன்றுள்ளது.

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் மற்றும் சர்வதேச தரத்திற்கு அதனை மாற்றுவதற்கான முயற்சிகளில் இந்திய அரசாங்கம் முழு முனைப்புடன் செயற்பட்டுவரும் நிலையில் 500 ஆண்டுகளுக்குமுன் அல்லைப்பிட்டியில் தங்கள் கப்பல் தாண்டுவிட்டது அதனை அகழ்வாராய்ச்சி செய்கின்றோம் எனக்கூறி சீனா யாழ் குடாநாட்டில் காலூன்ற முற்பட்டுள்ளது.

யாழ் குடாநாட்டின் வட முனையிலுள்ள பலாலி விமான நிலையத்தை இந்தியா குறிவைத்துள்ள நிலையிலேயே யாழ் குடாநாட்டின் தென்முனையிலுள்ள அல்லைப்பிட்டி துறைமுகப் பிரதேசத்தை ஆக்கிரமிக்க சீன அரசு முயன்றுள்ளது. இதற்கு இலங்கை அரசும் ஒத்துளைப்பு வழங்கியுள்ளது.

மத்தள விமான நிலையத்தை இந்தியா குத்தகைக்கு எடுக்க முற்பட்டபொது அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனா ஆக்கிரமித்தது. திருகோணமலையிலும் அதுபோலலே இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்பட்டபோது சீனாவும் அங்கு காலுன்றியது.

இதன் தொடர்ச்சியாகவே யாழ் குடாநாட்டிலும் சீனா காலூன்ற முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலைப் பிரதேசங்களில் சீனா காலூன்றுவது இந்தியாவுக்கு நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்தாதபோதிலும் வடக்கில் யாழ் குடாநாட்டில் சீனா காலூன்றுவது அதுவும்குறிப்பாக இந்திய இலங்கை கடற்பிரதேசத்தை நோக்கி அல்லைப்பிட்டியை நோக்கி சீனா தனது பார்வையைத் திருப்பியிருப்பது இந்தியாவிற்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரியவருகின்றது.

No comments