கல்லுண்டாய் வெளியில் பயிற்சி?


யாழ்.நகரின் புறநகர் பகுதியாக கல்லுண்டாய் வெளியில் இலங்கை இராணுவத்தினரது பிரசன்னத்துடன் இன்று ஞாயிற்றுக்கிழமை பயிற்சி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அங்கு பயிற்சியினால் ஏற்பட்ட தீயின் நீண்ட கரும்புகை மக்களிடையே பரபரப்பினை தோற்றுவித்திருந்தது.

இப்பகுதியில் இராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமையில் வழமையாக சூட்டுப்பயிற்சி செய்வார்கள். இன்றைய தினம் இராணுவத்தினர் தமது ஒத்திகைப்பயிற்சிக்காக தீயை உருவாக்கியிருக்கலாமென அயல் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அருகாக யாழ்.மாநகர சபையின் குப்பை சேகரிப்பு மையமுள்ளது. எனினும் குறித்த தீயினால் குப்பை போடும் பகுதிக்கு பாதிப்பில்லை. தூரமாகவே தீ ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருமளவிலான அம்புலன்ஸ் வாகனங்கள், படையினரது வாகனங்கள் அங்கு தரித்து நிற்க காணப்பட்டது.


மாதத்தின் பெரும்பாலான ஞாயிறுகிழமைகளில் இத்தகைய பயிற்சிகள் நிகழ்வதாகவும் நகரை அண்டிய பகுதியில் நடைபெறும் பயிற்சிகள் மக்களிடையே சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments