யாழ். அல்லைப்பிட்டியில் சீனர்கள் அகழ்வாராட்சி


பண்டைக்காலத்தில்  சீனாவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருந்த கடல்வழி வணிகத் தொடர்புகள் குறித்து, சீனாவின் ஷங்காய் அரும்பொருள் காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள், அல்லைப்பிட்டியில் அகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பண்டைய சீனாவின் பட்டுப்பாதை வணிகம், யாழ்ப்பாணத்துக்கும் பரவியிருந்ததாக கூறப்படுகிறது.

1980களின் தொடக்கத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள தீவகத்தின் அல்லைப்பிட்டி பகுதியில், சீன நாணயங்கள் மற்றும் பண்டைக்கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு சீன ஆய்வாளர்கள் ஆய்வுகளில் ஈடுபட்டனர்.

பின்னர் போர்ச் சூழலினால் அந்த ஆய்வுகள் கைவிடப்பட்டன.

இந்த நிலையில்,  அல்லைப்பிட்டி கப்பல் துறைப் பகுதியில் சீனாவின். ஷங்காய் அருங்காட்சியகத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் மீண்டும் ஆகழ்வாய்வில் ஈடுபட்டுள்ளனர்.

அல்லைப்பிட்டி பகுதியில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கியதாக கூறப்படும் சீன வணிகக் கப்பல் ஒன்றினது தடயங்களைக் கண்டறியும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியுடனும், சிறிலங்கா தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடனும் இந்த அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

எனினும், இந்த அகழ்வாராய்ச்சி தொடர்பாக உள்ளூரில் உள்ள தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கருத்து எதையும் வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளனர்.

No comments