கடும் காற்று வீச்சு! அம்பாறையில் 217 வீடுகள் சேதம்!

அம்பாறையில் வீசிய கடும் காற்றினால் 217 வீடுகள் சேதமடைந்துள்ளன.
நககம்புற பகுதியில், 150 வீடுகளும், திஸ்ஸபுற பகுதியில் 22 வீடுகளும், கரங்காவ பகுதியில் 28 வீடுகளும், மிஹிதுபற பகுதியில் 11 வீடுகளும் , சத்தாதிஸ்ஸபுற பகுதியில் 3 வீடுகளும், ஜயவர்தனபுற பகுதியில் 2 வீடுகளுக்கும் இவ்வாறு சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களினால் சேதமடைந்த வீடுகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் திரட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உலர் உணவுகள் வழங்கும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments