இலங்கை போர்க்குற்றவாளிகள் ஐ.நா அமைதிப்படையில் - சர்வதேச அமைப்பு அறிக்கை


மோதல் வலயங்களில் அமைதிப்படையினராக செயற்படுவதற்காக போர்க்குற்றவாளிகளாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபை அனுப்பிவருவதாக தென் ஆபிரிக்காவைத் தளமாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பினரால் தயார் செய்யப்பட்ட இரகசிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்த குற்றங்களை இழைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மாலி, லெபனான், டாபூர் மற்றும் தென் சூடான் ஆகிய மோதல் வலயங்களில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இருந்தபோதிலும் 2016ம் ஆண்டில் இலங்கையின் சிரேஸ்ட இராணுவ அதிகாரி ஒருவர் மேற்கு சூடானின் டாவூர் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் மற்றுமொருவர் மோதல் இன்னமும் தொடர்ந்துகொண்டிருக்கும் தென் சூடான் பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது முன்னரங்கப் மோதல் நிலைகளில் ஈடுபட்டவர்களை அமைதிகாக்கும் படையணிகளில் உள்வாங்கும் போது, குற்றமிழைத்தவர்களையும் இழைக்காதவர்களையும் வடிகட்டி வேறுபடுத்தும் ஒரு நடைமுறையை ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பித்த போதும் அது தோல்விகண்டுவிட்டதாக செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

No comments