வடமாகாண முதமைச்சருடன் இணையவுள்ளாரா விஜயகலா மகேஸ்வரன்?

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இணையவுள்ளதாக கொழும்பிலிருந்து வரும் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் என்றும், அத்துடன் அவர் வடமாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் இணைந்து ஒரு பொதுக்கூட்டணியில் செயற்படுவது தொடர்பில் பல கட்டப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாகவும் கொழும்புச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் இணைந்து செயற்படவுள்ள விஜயகலா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் ஆதரவைக் கோரவுள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. எனினும் இதனை உத்தியோகபூர்வமாக உறுதி செய்யமுடியவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீள உருவாக வேண்டுமென்ற வகையில் கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியதோடு,  தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்த விஜயகலா, தற்போது அவர் சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நான்கு பேர் அடங்கிய குழுவின் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments