தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்!

அனைத்து நெதர்லாந்து வாழ் தமிழ் உறவுகளே!

17-09-18 அன்று நடைபெறும் ஜெனீவா பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஜெனீவா வரையான   ஈருருளிப் பயணம் ஓன்று மனிதநேய செயட்பாட்டளர்களினால் நெதர்லாந்தில் இருந்து  ஒழுங்குசெயப்பட்டுள்ளது.

இப்பயணமானது எதிர்வரும் 03-09-18 அன்று நெதர்லாந்த் டென்ஹாக் நகரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்திற்கு முன்பாக இருந்து மதியம் 14.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.



இப்பயணத்தில் லண்டனில் இருந்துவரும் மனிதநேய செயட்பாட்டளர்களுடன் இணைந்து நெதர்லாந்து வாழ் மனிதநேய செயற்பாட்டாளர்களும் பெல்ஜியம் வரை சென்று இப்பயணத்திற்கு வலுச்சேர்ப்பார்கள்.

இப்பயணதில் இணைந்து வலுச்சேர்க்க விரும்பும் அனைத்து தமிழ் உறவுகளும் வரவேற்கப்படுவார்கள்.
 இப்பயண அணியானது தாங்கள் செல்லும் நாடுகளின் செல்லும் வழிகளுக்கூடாக தாங்கள் சந்திக்கும் அந்தந்த இடத்து பொதுமக்கள் மற்றும் அந்த இடத்தில் உள்ள அரசகாரியாலங்களில் உள்ள அரச உயர் அதிகாரிகளையும் சந்தித்து எமக்கு நடந்த இனப்படுகொலைபற்றியும் ,எமது இனத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட அநீதிகள் பற்றியும் விளக்கிச்செல்வதோடு தங்கள் பயணத்தின் நோக்கங்கள் பற்றியும் விளக்கிச்செல்வார்கள் .

ஆகவே நெதர்லாந்து வாழ் தமிழ் உறவுகளே!
 அனைவரும் எதிர்வரும் 03-09-18  அன்று டென்ஹாகில் உள்ள குற்றவியல் நீதிமன்றம் Prins Clauslaan 60, 2595 AJ Den Haag  முன்பாக மதியம் 14.00 மணிக்கு அணிதிரளுமாறு தாழ்மையுடன் வேண்டிநிற்கிறோம்.

தொடர்புகள் நெதர்லாந் தமிழர் மக்களவை
0686203203, 0623656772

.நன்றி!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் .

No comments