கறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலையின் 35 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு பிரான்சு

ஆரம்பநிகழ்வாக கறுப்பு யூலை படுகொலையில் சாவடைந்த மக்கள் நினைவாக ஈகைசுடர் ஏற்றப் பட்டதைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது.
தமிழீழ மக்கள் பேரவை சார்பில் திரு திருச்சோதியும், இளையோர் அமைப்பின் சார்பில் செல்வி பானுசா அவர்களும், மாட்டினிக் நாட்டு மனிதநேயச் செயற்பாட்டாளர் திருமதி Graziella Ravin அவர்களும் , மூதாளர் பேரவையைச் சேர்ந்த திரு.கிருபா அவர்களும் உரையாற்றியிருந்தனர்.
இவர்களின் உரைகளில் 1983 இனக்கலவரத்தின் நேரடிச் சாட்சியாக மூதாளர் பேரவையைச் சேர்ந்த திரு கிருபாஅவர்களின் உரை அமைந்திருந்தது. செல்வி பானுசா அவர்கள் பிரெஞ்சு மொழியில் சிறீலங்காவில் 1948 தொடக்கம் இன்று வரை இடம் பெறும் தமிழின அழிப்பு குறித்தும் உரையாற்றியிருந்தார்.
தமிழீழ மக்கள் பேரவைசார்பில் உரையாற்றிய திரு திருச்சோதி அவர்கள் தமிழினம் விடுதலை அடையும் வரை இவ்வாறான போராட்டங்கள் ஓயப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
பிரெஞ்சு மொழியில் வெளிநாட்டவர்களுக்கு கவனயீர்ப்பின் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப் பட்டதுடன், பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழி அடங்கிய துண்டுப்பிரசுரங்களும் வெளிநாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் பலரும் எமது மக்கள் சிறிலங்கா அரசினால் இனப்படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கேட்டறிந்து தமது ஆதங்கங்களைத் தெரிவித்துக்கொண்டனர்.
இறுதியாக தமிழரின் தமிழீழத் தாயகம் என்ற முழக்கத்துடன் ஒன்று கூடல் நிறைவு பெற்றது.
Post a Comment