மாணவிகள் மீது பாலியல் துர்நடத்தை! ஆசிரியர் கைது!
யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகள் இருவரை ஆசிரியர் ஒருவர் பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறி யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தரம் 7இல் கல்வி கற்கும் மாணவிகள் இருவர் மீது அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரே இவ்வாறு பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது.
குறித்த மாணவிகள் இருவரையும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவினரால் யாழ்ப்பாண காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, ஆசிரியர் மீதான இந்த முறைப்பாட்டுக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பாடசாலையில் கல்வி கற்பித்து வந்த 48 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
குறித்த நபரை இன்று யாழ்ப்பாணம் நீதி மன்றத்தில் முற்பட்டுத்த காவல்துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்

Post a Comment