சுவிசில் எழுச்சியுடன் நடைபெற்ற கரும்புலிகள் நினைவு சுமந்த வணக்க நிகழ்வு!

தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது  எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து  காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 14.07.2018 சனிக்கிழமை பேர்ண்  மாநிலத்தில் எழுச்சியுடன் நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி  நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி, ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம், மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்ட வேளையில் இசைக்கலைஞர்களால் எழுச்சிப் பாடல்களும்; வழங்கப்பட்டன.

முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 31வது ஆண்டு நினைவுகளைத் தாங்கியதுமான இவ்வெழுச்சிநிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக எழுச்சிப்பாடல்கள்;, எழுச்சி நடனம், கவிதை, சிறப்புரையோடு எமது பழம்பெரும் கலையான வில்லுப்பாட்டு நிகழ்வும்; இடம்பெற்றது.

நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றன. 

''மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்'' என்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் இலட்சியப் பணியை அனைவரும் ஒன்றிணைந்து வலுப்படுத்திச்  செயற்படுத்தவும், தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டும் ஐ.நா நோக்கி 17.09.2018 திங்கட்கிழமை அன்று நடைபெறவுள்ள மாபெரும் பொங்குதமிழ் நிகழ்விற்கு ஜ.நா நோக்கி பொங்குதமிழராய் அணிதிரண்டு தமிழின அழிப்பிற்கு நீதி கேட்க முரசறைவோம் என அனைத்து தமிழ் உறவுகளையும் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உரிமையோடு இத்தருணத்தில்  வேண்டி நிற்கின்றது.








No comments