மல்லாகத்தில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸார் ஒருவர் பலி


யாழ்ப்பாணம்  மல்லாகம் பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர்  ஒருவர் இன்று (3) மதியம் 2 மணியளவில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய திருகோணமலை கந்தளாய் பகுதியை  சேர்ந்த என்.  நசீர்(வயது-25) என்பவரே   இவ்வாறு கடமைநேரத்தில்  உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் சந்திக்கருகில் உள்ள சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் வாயிற்கடமையில் இருந்த நிலையில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை  மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி வெடித்தமைக்கான  காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எனினும் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.உயிரிழந்தவர் பொலிஸ் பயிற்சி கல்லூரியில் இருந்து அண்மையில் வெளியேறி பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார்.

No comments