அச்சுவேலியில் போதைப் பொருளுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் போதை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு செயற்றிடங்கள் அச்சுவேலியில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.

அச்சுவேலி பேருந்து நிலையத்துக்க முன்பாக போதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்கள் ஆரம்பமாகின. அச்சுவேலி நகரில் சில மணி நேரங்கள் விழிப்புணர்வுப் பதாகைகளுடன் கூடிய பிரதேச சபையின் ஊர்திகள் போதைக்கெதிரான விழிப்புணர்வு வாசங்களை ஒலிபெருக்கி ஊடாக அறிவிப்புச் செய்தவாறு நகர் வலம் வந்தன.

இதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலதரப்பட்டவர்களும் போதைக்கு எதிரான சுலோகங்களுடன் நின்று போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அணிவகுப்புச் செய்தனர்.

No comments