திருகோணமலையில் புத்தர் சிலை உடைப்பு!

திருகோணமலை - சீனாகுடாப் பகுதில் அமைந்துள்ள புத்தர் சிலையின் தலை உடைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது.

குறித்த புத்தர் சிலை அமைந்த தானியகம பகுதி நீண்டகாலமாக கவனிப்பாரற்று இருந்துள்ளது. குறித்த புத்தர் சிலை இனம் தெரியாதவர்களால் வேண்டும் என்றே அடித்து நொருக்கப்பட்டிருக்கலாம் அல்லது அப்பகுதியில் அதிகரித்து காணப்படும் குரங்குகளின் சிலை அடித்து நாசப்படுத்தியிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இதுகுறித்து விசாரணைகளை சீனன்குடா காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments