இலங்கையுடன் இந்தியா இருக்கின்றது:மோடி!


மகிழ்வான நேரத்திலும் துன்பமான சூழலிலும் இலங்கைக்கு இந்தியாவே உதவிவந்துள்ளதாக இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.காணொலி மூலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அம்புலன்சேவை ஆரம்பிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் இலங்கையின் நெருங்கிய காவலனாக தெற்காசியவிலும் இந்துசமுத்திரத்தின் மத்தியிலும் இந்தியா இருக்குமென தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் நிகழ்விற்கான தனது பயணம்  குறித்து நினைவுகூர்ந்த அவர் யாழ்ப்பாணத்தில் தனக்கு தரப்பட்ட வரவேற்பினையும் நினைவுகூர்ந்திருந்தார்.

இலங்கையில் அவசர அம்புலன்ஸ் சேவையினை இந்திய அரசு உதவியின் கீழ் இலங்கை அரசு ஆரம்பித்துள்ளது. தென்னிலங்கைக்கு அள்ளியும் வடக்கிற்கு கிள்ளியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட அம்புலன்ஸ்களின் சேவை ஆரம்பிக்கப்படுவதை முன்னிட்டே காணொலி மூலம் மோடி பேசியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தங்கியுள்ள நிலையில் மோடி உரையாற்றியுள்ளார்.

இதனிடையே நேற்று காங்கிரஸின் ராகுல் காந்தி தலைமையில் மோடிக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் மோடி வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments