கூட்டமைப்பு தொடர்பில் மக்கள் விழிப்பு!

தமிழ் மக்களைப் பாவித்து வேறு தரப்புக்களுக்காகவே கூட்டமைப்பு செயற்படப் போகிறது என்பதை 2010 இல் இருந்தே நாம் சொல்லி வந்தோம். இவை அன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்படாத நிலைமை இருந்தாலும் மக்களிடம் பதிந்திருந்தது என்பதே உண்மை. இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. இதனை முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் சொல்ல தொடங்கினார். அதே போன்று கூட்டமைப்பிற்குள்ளுக்கிருந்தே சிலரும் இந்த விடயங்களைக் கூறி வந்தனரென தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அரசாங்கத்திற்காக தாம் இதுவரை ஆதரவை வழங்கி முண்டு கொடுத்து வந்ததாகவும் இனி அரசிற்கு வழங்கும் ஆதரவை விலக்கிக் கொள்ளப் போவதாகவும் அதையே சர்வதேசமும் விரும்புதாக கூட்டமைப்பு அண்மையில் தெரிவித்திருக்கின்றது. 

இதற்கு பதிலளித்துள்ள கஜேந்திரகுமார் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தான் இந்தக் கருத்தைக் கூறியிருக்கின்றார். ஆனால் அதுவொரு அப்பட்டமான பொய். எங்களுடைய மக்கள் இதனை விளங்கிக் கொள்வார்கள் . ஏனெனில் கூட்டமைப்பு வெளிநாடகளின் எடுபிடிகளாகவூம் அவர்களது தேவைகளை நிறைவேற்றும் கருவிகளாகவே செயற்பட்டிருக்கின்றனரே தவிர தமிழ் மக்களுடைய நலன்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை என்பதை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் சொல்லி வந்திருக்கிறோம்.

கூட்டமைப்பின் இத்தகைய செயற்பாடுகளை நாங்கள் விளங்கிக் கொண்டு அங்கிருந்து வெளியேறியதுடன் அதனை அம்பலப்படுத்திக் கொண்டே வருகின்றோம். அந்தக் கருத்துக்கள் ஆரம்பத்தில் எடுபடாமல் விட்டிருந்தாலும் அவை மக்கள் மனதில் பதிந்து போயிருக்கின்றன. தமிழ் மக்களைப் பாவித்து வேறு தரப்புக்களுக்காகவே கூட்டமைப்பு செயற்படப் போகிறது என்பதை 2010 இல் இருந்தே சொல்லி வந்தோம். இவை அன்றைக்கு ஏற்றுக் கொள்ளப்படாத நிலைமை இருந்தாலும் மக்களிடம் பதிந்திருந்தது என்பதே உண்மை. இதை நாங்கள் மட்டும் சொல்லவில்லை. இதனை முதலமைச்சர் விக்கினேஸ்வரனும் சொல்ல தொடங்கினார். அதே போன்று கூட்டமைப்பிற்குள்ளுக்கிரந்தே சிலரும் இந்த விடயங்களைக் கூறி வந்தனர். 

ஆகையினால் அது பெரிய அளவில் மக்கள் மத்தியில் எடுபட்ட ஒரு விடயமாக வர கூட்டமைப்பிற்கும் ஒரு இருப்புப் பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால் கடந்த தேர்தலில் கூட அரைவாசிக்கு மேல் அவர்களது வாக்குகள் சரிந்தன. அதே போன்று தேர்தலுக்குப் பிறகும் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ளாமல் சிங்களக் கட்சிகளோடும் ஈபிடிபி போன்ற கட்சிகளோடும் ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கச் செயற்பட்டவை. 

இவை எல்லாத்தையூம் மக்கள் பார்த்து அவர்களை வெறுத்து ஒதுக்கப்படுகின்ற நிலையில் தான் கடந்த 8 வருடமாக நடந்து வரும் பாதையில் தொடர்ந்தும் செயற்பட்டால் கட்சியே அழியும் என்பதுடன் அரசியல் தற்கொலை என்ற இடத்திற்கு அது கொண்டு செல்லும் என்ற விடயத்தை விளங்கியதனால் தான் தற்காப்பு நடவடிக்கையாக இப்ப ஏதோ தாங்கள் பெருமனதோடு தான் அரசாங்கத்தை ஆதரித்ததாகவும் இனியூம் அரசாங்கத்தை ஆதரிக்கத் தேவையில்லை என்று சொல்லி எங்களுக்கும் விட அதிகூடிய தேசியவாதத்தைக் கதைக்கின்ற தரப்பாகத் தான் இவர்கள் நடிக்கப் போகின்றார்கள். 

எங்களைப் பொறுத்தவரையில் நான் நினைக்கிறேன் மக்கள் அனுபவம் மிக்கவர்கள். தங்களால் இயலாதா ஒரு கட்டத்தில் தங்களது இருப்பை உறுதிப்படுத்துவதற்காக ஒரு நாடகத்தை நடிக்கப் போகின்றார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதை அனைஅவ்ரும் புரிந்துகொள்வார்கள்.இவர்கள் ஒரு போதிலும் எங்களது அடிப்படை விடயங்களில் நேரமையாகச் செயற்படப் போவதில்லை என்பதை மக்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments