குடும்பி மலையும் பறிபோகின்றது?

மஹிந்த அரசு சம்பூரை இந்தியாவிற்கு தாரை வார்த்திருந்த கதை கடந்து தமிழபேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலையில் 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் காணியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கரும்புச் செய்கைக்காக இந்தக் காணியை வழங்கவுள்ளதாக இலங்கைப் பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை மையமாகக் கொண்ட குடும்பிமலை பிரதேசத்திற்கு அண்மித்த 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் பொதுக் காணியை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான உட்படிக்கை செய்யப்பட்டுள்ளது.  

போர்க் காலத்தில் குடும்பிமலையில் இருந்து அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். தற்போது 67 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் இருநூறு தமிழ் மக்கள் மாத்திரமே வாழ்க்கின்றனர். நெற்செய்கை செய்யக்கூடிய நிலங்கள், குளங்கள் இருந்தும் வறுமை மற்றும் வேறு வசதிகள், உதவிகள் இல்லாத காரணத்தால் மக்கள் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments