தேசிய அடையாள அட்டையில் அமைச்சர்?

வடக்கு மாகாண மகிளிர் சிறுவர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பிரமுகர்களிற்கான கடவுச்சீட்டை பெறவே தன்னை ஓர் அமைச்சர் என தேசிய அடையாள அட்டையில் பொறிப்பதற்காக உறுதிப்படுத்தல் கடிதம் வழங்குமாறு கோரியிருப்பதாக அவரது ஆதரவு தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை காலமும் அவரது இலங்கை தேசிய அடையாள அட்டையில் முன்னர் வகித்து வந்த கிளார்க் பதவியை தொழலிலில் குறித்து வைத்திருந்துள்ளார்.எனினும் வெளிநாட்டு பயணங்களிற்கு ராஜதந்திரிகள் விசா அனுமதி பெறுவதற்கு அமைச்சர்,நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பதவிகள் முக்கியமாக அவதானிக்கப்படுகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் வடமாகாணசபை தேர்தலில் தனது தோல்வியை உணர்ந்து கொண்டுள்ள அவர் பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் ராஜதந்திர கடவுச்சீட்டை பெற அனந்தி சசிதரன் தனது தேசிய அடையாள அட்டையின் தொழில் எனக்கோரும் பகுதியில் மாகாண அமைச்சர் எனப் பொறிக்கும் வகையில் உறுதிப்படுத்தல் கடிதம் ஒன்றினை வழங்குமாறு விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு குறித்த விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார். கடந்த வாரம் விண்ணப்பித்த மேற்படி வேண்டுதல் தொடர்பில் பிரதம செயலாளர் அலுவலகம் இதுவரை எந்தப் பதிலும் அனுப்பவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவ்விவகாரத்தை சுமந்திரனின் காதுகளில் அவரது தீவிர ஆதரவாளராக மாறியிருக்கும் பிரதம செயலாளர் போட்டுவிட அதனை அவர் முகவர்களின் ஊடாக கசிய விட்டுள்ளதாக தெரியவருகின்றது.

No comments