மகிந்தவைச் சந்திக்கிறார் சம்பந்தன் ?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், விரைவில் மகிந்த ராஜபக்சவைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த தகவலை வெளியிட்டார்.

“புதிய அரசியலமைப்பு தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன், இரா.சம்பந்தன் பேசவுள்ளார்.

புதிய அரசியலமைப்பை எல்லாக் கட்சிகளினதும் ஆதரவுடன் தான் நிறைவேற்ற முடியும்.

அண்மையில் நாடாளுமன்றத்தில், மகிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடிய போது, சம்பந்தனுடன் இதுபற்றிப் பேச வேண்டும் என்று என்னிடம் கூறியிருந்தார்.

இன்னமும் இந்தச் சந்திப்புக்கான நாள் தீர்மானிக்கப்படவில்லை. விரைவில் அந்தச் சந்திப்பு நடைபெறும்.

அடுத்த வாரம் நாடாளுமன்றம் கூடும் போது,சந்திப்புக்கான நாளை ஒழுங்குபடுத்த முடியும் என்று நம்புவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments