அதிரடிப்படைக்கு காணி:முண்டியடிக்கும் அதிகாரிகள்!யாழ்.மாவட்டத்தில் மட்டுமே காணியற்ற 14ஆயிரத்திற்கும் அதிகமாக குடும்பங்கள் காத்திருப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இவற்றிற்கு பகிர்ந்தளிக்க அரச காணிகள் ஏதுமில்லாதிருப்பதாகவும் அவை மேலும் தெரிவிக்கின்றன.

ஒருபுறம் முப்படைகளிற்குமென யாழில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் மறுபுறம் நாவற்குழியிலுள்ள அரச காணிகளை இலங்கை அதிரடிப்படைக்கு நிரந்தர முகாம் அமைக்க கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தெரியவருகின்றது.

ஏற்கனவே நாவற்குழியில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்களால் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.பூர்வீக தமிழ் குடிகளோ காணிகள் அற்ற நிலையில் அகதி வாழ்க்கையினை தொடர்கின்றன.இந்நிலையில் அவர்களிற்கு காணிகளை பகிர்ந்து வழங்க பின்னடித்துவரும் அதிகாரிகள் மறுபுறம் அதிரடிப்படையினருக்கு நிரந்தர முகாம் அமைக்க காணிகளை ஒதுக்கிவழங்க முற்பட்டுள்ளனர்.

குறித்த அதிரடிப்படை முகாமின் பாதுகாப்பிற்கே அதிரடிப்படையினர்  முகாமிட்டு நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments