அரசியல் கைதிகள் பட்டியலை தொலைத்த சம்பந்தன்!

தற்போது தென்னிலங்கை சிறைகளில் தடுத்து வைக்க்பபட்டுள்ள அரசியல் கைதிகளது விபரத்தை முழுமையாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் நான் கையளித்திருந்தேன்.தற்போது 14 சிறைகளில் 109 அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தற்போது அரசியல் கைதிகளது விடுதலைக்கான அமைப்பின் தலைவர் வணபிதா சக்திவேல் அடிகளார் இரா.சம்பந்தனை சந்தித்து அரசியல் கைதிகளது விடுதலை தொடர்பில் கடந்த வாரம் பேசியுள்ளார்.அப்போதும்  அரசியல் கைதிகளது விபரத்தை முழுமையாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சமர்ப்பிக்க கோரியுள்ளார். அவ்வாறாயின் கடந்த 3 மாதங்களிற்கு முன்னர் நான் வழங்கிய விபரப்பட்டியலிற்கு என்ன நடந்ததென கேள்வி எழுப்பியுள்ளார் அரசியல் கைதியாக இருந்து விடுதலையாகியுள்ள.ஜெயராம் இராமநாதன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வியொன்றிற்கு பதிலளித்த அவர் உண்மையில் தமிழ் அரசியல் கைதிகளது நிலை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகளது மனோநிலை இவ்வாறு தான் இருக்கின்றது.அவர்கள் எவருமே உண்மையில் அரசியல் கைதிகள் பற்றி அக்கறையற்றேயிருக்கின்றனர்.

நான் மூன்று மாதத்திற்கு முன்னர் ஒப்படைத்த பட்டியலே தற்போது சம்பந்தனிடம் இல்லையாம்.அவரிடம் மட்டுமல்ல முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முதல் அனைத்து தமிழ் அரசியல் தலைவர்களிடமும் விபரங்களை கொடுத்துள்ளேன். 

உண்மையில் போதிய சட்ட உதவி மற்றும் துறைசார்ந்த சட்டத்தரணிகளின் சேவை கிடைத்தால் அவர்கள் விடுதலையாகிவிடுவர்.

புலம்பெயர் உறவுகள்,நண்பர்கள் ஒவ்வொரு அரசியல் கைதிகளை பொறுப்பேற்று அவர்களை விடுவிக்க உதவ முன்வருமாறும் அவர் அழைப்புவிடுத்துள்ளார்.

No comments