பதவி நீக்குவதெப்படி: படிப்பிக்க வருகிறார் டெனீஸ்!

தன்னை ஒரே நாளில் சட்டப்படி நீக்குவது எவ்வாறு என்பதை சம்மந்தப்பட்டவர்களுக்கு இலவசமாக சொல்லித்தருகிறேனென வடமாகாண முன்னாள் அமைச்சர் ப.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தனது கேள்வி பதிலில் வடமாகாணசபையின் அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சர் தெளிவான விளக்கமொன்றை அளித்திருந்தார்.இதனை ஊடகங்கள் இன்று முன்னுரிமை வழங்கி பிரசுரித்துள்ளன.

இதற்கு பதிலளித்துள்ள பா.டெனீஸ்வரன் தான் விட்ட பிழையென்ன எனபதை இப்போதுகூட விளங்கிகொள்ள வில்லையா? அல்லது விளங்கியும் விளங்காதவர் போன்று முதலமைச்சர் நடிக்கின்றாராவென கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் நீதிமன்றத் தீர்ப்பையும் 13 வது திருத்தச் சட்டத்தையும் நேரமிருந்தால் சற்று பார்க்கவும். அதன் பின்னரும் விளங்கவில்லையாயின் என்னிடம் கேளுங்கள்.இல்லையேல் ஒருசில தினங்களில் அதிரடி நடவடிக்கைகள் தொடருமென தனது முகப்புத்தகத்தில் டெனீஸ்வரன் கருத்து பதிவு செய்துள்ளார்.

இதனிடையே வடமாகாண ஆளுநர் மற்றும் தமிழரசுக்கட்சி பின்னணியிலேயே பா.டெனீஸ்வரன் குழப்பங்களை செய்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருவது தெரிந்ததே.

No comments