யோகேஸ்வரன் எம்.பியிடம் 50 மில்லியன் பேரம் !


தமக்கு 50 மில்லியன் ரூபா தருவதாக பேரம் பேசப்பட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

மட்டக்களப்பு- கும்புறுமூலைப் பகுதியில் அமைக்கப்படும் எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதற்கே, 50 மில்லியன் ரூபா தரப்படும் என்று பேரம் பேசப்பட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியசினால் கட்டப்படும் இந்த எத்தனோல் தொழிற்சாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்ததாலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனிடம் இந்த பேரம் பேசப்பட்டுள்ளது.

தம்மிடம் தொலைபேசி மூலம் பேசிய அவர், எதிர்ப்புத் தெரிவிக்காமல் அமைதியாக இருப்பதற்கு, 50 மில்லியன் ரூபா தருவதாகவும் கூறினார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments