யாழ்.மாநகரசபையில் வட்டார சண்டை!

யாழ்.மாநகரசபையின் இன்றைய அமர்வில் கூட்டமைப்பு மற்றும் முன்னணி உறுப்பினர்களிடையே பரவலாக தர்க்கங்கள் நடந்தேறிக்கொண்டிருந்தது. தான் உறுப்பினர் பதவியில் இருக்ககூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருப்பதுடன், அதற்காக பல முயற்சிகளை இடைவிடாது எடுத்துக் கொண்டிருக்கிறது. என யாழ்.மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன் குற்றஞ்சுமத்தியிருந்தார்.
தமது வட்டாரத்தினுள் ஏனைய உறுப்பினர்கள் வரக்கூடாதென்ற கட்டைப்பஞ்சாயத்தில் கூட்டமைப்பினர் ஈடுபட்டுக்கொண்டிருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
இதனிடையே யாழ்ப்பாண மாநகர பையின் பிரதி முதல்வர் எமது கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவரை அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருக்கின்றோம். மாநகர சபை பிரதி முதல்வராக இருக்கின்றவர் முன்னாள் ஆயுதக் குழு ஒன்றின் சார்பாகவே போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். ஆகையினால் அவரிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆயினும் எமது உறுப்பினருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் நாம் உரிய நடவடிக்கைகளைமேற்கொள்ள இருக்கின்றோம்.
மாநகர சபையில் ஆளுங்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சபையில் எதிர்க்கட்சியாக இருக்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளையும் எம்மை முடக்குகின்ற செயற்பாடுகளையுமே தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். 
மாநகர சபையில் எமது கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கின்ற நான் சபையின் மராமத்துக் குழுவின் தலைவராகவும் இருக்கின்றேன்;. அத்தோடு சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் அவர்கள் தங்கள் தங்கள் வட்டாரத்திற்கான அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றமை போன்று தேசியப் பட்டியல் உறுப்பினராக இருக்கின்ற எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் நானும் பல இடங்களில் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்து வருகின்றேன்.

அவ்வாறு நான் அபிவிருத்திகளை முன்னெடுத்து அதனைக் குழப்பும் செயற்பாடுகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொள்கின்றனர். ஏனெனில் அவர்கள் தங்கள் வட்டாரங்களில் தாங்கள் தான் எதுவானாலும் செய்ய வேண்டும்.

அங்கு வேறு யாரும் எந்த அபிவிருத்தியும் செய்யக் கூடாதென்று கூறுகின்றனர். ஆனால் மாநகர சபையின் மராமத்துக் குழுவின் தலைவர் என்ற வகையில் சபை எல்லைக்குட்பட்ட எந்தப் பகுதிக்கும் சென்று வர முடியும்.

ஆனால் மக்களுக்கான அபிவிருத்திகளை முன்னின்று செயற்படுவதால் என்னை முடக்குவதற்கும் என்னை அகற்றுவதற்குமான சதி வேலைகளை கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மாநகர சபையில் நல்ல திட்டங்களை மற்றும்ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்கின்ற போது அதனை ஏன் தடுக்கின்றனர் அல்லது ஏன் விரும்புகின்றனர் இல்லை என்ற கேள்வி எழுகின்றது. இது விடயங்களில் எனது கட்சியையும் என்னையும் பொறுத்தவரையில் சபை ஆரம்பிக்கப்பட்ட போதே முதல்வரின் அதிகார துஸ்பிரயோகங்களை நாங்கள் வெளிக் கொண்டு வந்ததாலும், மாநகரத்தில் நடைபெறு கின்ற இரானுவத்தினரின் நிகழ்வுகளில் பங்குபற்றுவதில்லை எனச் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக சபை முதல்வர் கலந்து கொண்டமை தொடர்பில் சபையில் எதிர்ப்புவெளியிட்டமை, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோரி சர்வவதேச விசாரணை வேண்டுமென சபையில் முதல்வரின் எதிர்ப்புக்க மத்தியிலும் தீர்மானமாக கொண்டுவரப்பட்டமை ஆகிய காரணங்களால் என்னை இந்தச் சபையில் இருந்து அகற்ற வேண்டுமெனநினைக் கின்றனர். இதே வேளையில் எமது மக்களினதும் மாநகரத்தினதும் அபிவிருத்தி மற்றும் உரிமை, உட்பட நிதி சார் வேலைத் திட்டமாக இருந்தாலும் அதை எதிர்க்கின்ற அல்லது அதனை விரும்பாத வகையில் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.

ஏனெனில் இவ்வாறு மக்களுக்காக நாம் செயற்படுகின்ற போது என்னை அகற்றினால் தாம் விரும்பியவாறு செயற்படலாமெனவும் கூட்டமைப்பினர் கருதுகின்றனர். இவ்வாறு என்னை அகற்றியோ அல்லது என்னுடைய செயற்பாடுகளைத் தடுத்தோ தாம் நினைத்தவாறு செயற்படலாமென அவர்கள் கருதுவது தவறு. அத்தேர்டு அவர்கள் மக்களுக்காக அதனைச் செய்யவில்லை என்பதுடன் தங்களது சுயநல அரசியலையும் சுயலாபங்களுக்காகவமே செய்கின்றார்கள் என்பதே உண்மை.

குறிப்பாக தற்போது நான் போட்டியிட்ட வட்டாரத்திலே நான் அபிவிருத்தி வேலை செய்வதை விரும்பாத சுயநலவாதி உறுப்பினர் ஒருவர் அதனை தடுத்திருக்கின்றார். ஆனால் அந்த வட்டாரத்தில் சபைக்கு ஆதாரத்தை நான் கட்டி வருகிறேன்.

ஆகையினால் அங்கு எது செய்யவும் எனக்கு சுதந்திரம், உரிமை உண்டு. அதனை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது என மணிவண்ணன்; தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments